ETV Bharat / state

மருத்துவமனை விரிவாக்கத்திற்காக வேரோடு பிடுங்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்ட மரங்கள்! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படவிருந்த 46 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டுள்ளன.

trees-uprooted-and-transplanted-for-hospital-expansion

author img

By

Published : Aug 5, 2020, 9:45 AM IST

Updated : Aug 5, 2020, 10:27 AM IST

விருதுநகர் - சாத்தூர் சாலையில் மாவட்ட விளையாட்டரங்கம் எதிரே வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இருந்த பகுதியில், சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் ரூ.380 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை கடந்த மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் ராமமூர்த்தி சாலையிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதையொட்டி, அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலிருந்த பழைய கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு, புதிய அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில், புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ள இடங்களிலிருந்த சுமார் 10 முதல் 50 வயதுடைய 46 மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டது. இதையடுத்து, பொதுப்பணித் துறையினர் மூலம் கோவை பாரதியார் பல்கலைக்கழக திட்ட அலுவலரும் (மரங்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்), ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கே.சையதுவுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சையதுவின் வழிகாட்டுதல்கள்படி விருதுநகர் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்காக வெட்டப்படவிருந்த 46 மரங்களும் அளவீடு செய்யப்பட்டு கிளைகள் அகற்றப்பட்டன. பின்னர், பொக்லைன், கிரேன் போன்ற இயந்திரங்கள் மூலம் வேரோடு பிடுங்கப்பட்ட வேம்பு, அரசமரம், புங்கை, வாகை உள்ளிட்ட 46 மரங்கள், 6 கி.மீ தொலைவில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவர் ஓரத்தில் வரிசையாக நடப்பட்டன.

தற்போது நட்டுவைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் துளிர்விட்டு மீண்டும் வளரத் தொடங்கியுள்ளன. வெட்டப்பட இருந்த மரங்கள் மறுவாழ்வு பெற்ற நிகழ்வு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Aug 5, 2020, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.