ETV Bharat / state

அரசு ஓட்டுநரை தாக்கிய போலீசார்; குறுக்கும்-மறுக்குமாக பேருந்துகளை நிறுத்திப் போராட்டம்

விருதுநகர்: கோவில்பட்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநரை காவல் துறையினர் தாக்கியதாகக் கூறி, பேருந்துகளை குறுக்கும் மறுக்குமாக நிறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

அரசு பஸ் டிரைவர்களுக்கிடையே மோதல்
author img

By

Published : Apr 23, 2019, 9:06 PM IST

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவில்பட்டி பணிமனையைச் சேர்ந்தவர் ஓட்டுநர் கிருஷ்ணசாமி (40). இவருக்கும் சாத்தூர் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் சொரூபராஜ் (40) என்பவருக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மதுரை செல்லும் பேருந்து நிலையத்தில் இருந்து யார் முதலில் பேருந்தினை எடுத்துச் செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலையில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்தினை எடுப்பதில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஓட்டுநர் சொரூபராஜ், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக பேருந்து நிலையத்திற்கு வந்த காவல் துறையினர், ஓட்டுநர் கிருஷ்ணசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, காவல் நிலையத்தில் தன்னை காவல் துறையினர் தாக்கியதாக கிருஷ்ணசாமி, சக தொழிலாளர்களுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளை குறுக்கும் மறுக்குமாக நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பேருந்து நிலையத்துக்கு வெளியேயும் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாத்தூர் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் சொரூபராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் காவல் துறையினரே அரசுப் பேருந்துகளை இயக்கி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தினர்.

மேலும், கோவில்பட்டி, சாத்தூர் பணிமனை மேலாளர்கள் ரமேஷன், சுப்பிரமணியன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஓட்டுநர், நடத்துநர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

police drive govt bus
அரசு பஸ்சை இயக்கிய போலீஸ்

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் 2 அரசு பஸ் டிரைவர்களுக்கு இடையே பஸ் எடுக்கும் நேரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸார் தாக்கியதாக கூறி, அரசு பஸ் ஊழியர்கள் பஸ் நிலையத்தில் குறுக்கும் மறுக்குமாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த டிரைவர்  வெள்ளாங்கோட்டை சுப்பையா மகன் கிருஷ்ணசாமி(40). சாத்தூர் பணிமனையை சேர்ந்த டிரைவர் சாத்தூர் வட்டம் வன்னிமடையை சேர்ந்த சந்தானமுத்து மகன் சொரூபராஜ்(40). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 நாட்களுககு முன் மதுரை செல்லும் பஸ் நிலையத்தில் இருந்து யார் முதலில் பஸ்சினை எடுத்து செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலையில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சினை எடுப்பதில் மீண்டும் அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாத்தூர் பணிமனை சேர்ந்த டிரைவர் சொரூபராஜ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீஸார் பஸ் நிலையத்துக்கு வந்து கிருஷ்ணசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதில், காவல் நிலையத்தில் தன்னை போலீஸார் தாக்கியதாக கிருஷ்ணசாமி சக ஊழியர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசு பஸ் ஓட்டுநர்கள் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நின்ற அனைத்து அரசு பேருந்துகளை குறுக்கும் மறுக்குமாக நிறுத்தினர். மேலும், பேருந்து நிலையத்துக்கு வெளியேயும்  பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன.

தகவல் அறிந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், காவல் ஆய்வாளர்கள் ஐயப்பன், சுதேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், சாத்தூர் பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் சொரூபராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதி கூறினர்.

இதனால் போலீஸாரே அரசு பஸ்களை இயக்கி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தினர். மேலும், கோவில்பட்டி, சாத்தூர் பணிமனை மேலாளர்கள் ரமேஷன், சுப்பிரமணியன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, டிரைவர், நடத்துனர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அரசு பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.