விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் திரளாகக் கலந்து கொண்டனர்.
அடுத்தாண்டு (2021) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் பெயர், புகைப்படமும் புறக்கணிக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் பேசிய சாத்தூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன், “அதிமுக சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு பால்வளத்துறைஅமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துவருகிறார் என்றார். எம்எல்ஏ ஒருவர் அமைச்சருக்கு எதிராக, மாவட்ட கூட்டத்தில் தெரிவித்த கருத்தால் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...விவசாய மசோதாக்களை எதிர்த்து தேனியில் நாளை காங்கிரஸ் மாநாடு!