விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நரிக்குடி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள், கோண்பனேந்தல் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த மூன்று டிப்பர் லாரிகளை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர், ஓட்டுநர்களிடம் விசரணை மேற்கொண்டதில், அவர்களிடம் எவ்வித ஆவணங்களுமின்றி குண்டாற்றில் மணல் அள்ளியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, டிப்பர் லாரி ஓட்டுநர்களான பாலமுருகன், மதன்ராஜ், கற்பக பாண்டி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த கருணாநிதி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மகராஷ்டிராவில் ஊரடங்கு விதிகளை மீறிய மணமக்கள் மீது வழக்குப்பதிவு!