ETV Bharat / state

மொட்ட பெத்தான் கண்மாயில்  திருட்டு மணல் பறிமுதல்!

author img

By

Published : Nov 23, 2019, 1:49 AM IST

Updated : Nov 23, 2019, 8:02 AM IST

விருதுநகர்: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மொட்ட பெத்தான் கண்மாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 டிராக்டர் திருட்டு மணலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Sand theft

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செண்பகத்தோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் மொட்ட பெத்தான் கண்மாய் உள்ளது. இக்கண்மாய் பகுதியில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தலைமையில் அப்பகுதி முழுவதும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, கண்மாய் அருகே 50 டிராக்டர் அளவுள்ள திருட்டு மணல்கள் அடையாளம் தெரியாத நபர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அலுவலர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து, திருட்டு மணல்களை காவல்துறையினர் உதவியுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மொட்ட பெத்தான் கண்மாயில் பதுக்கிவைக்கபட்டுள்ள மணல்கள்

இதையடுத்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல்களை யார் வைத்திருந்தது என்று அப்பகுதி முழுவதும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மணல் திருட்டு செயல்களில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மணல் கடத்திய 22 மாட்டு வண்டிகள் பறிமுதல் - காவல்துறை அதிரடி!

Intro:விருதுநகர்
22-11-19

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 டிராக்டர் அளவுள்ள திருட்டு மணல்களை வருவாய்த்துறையினர் பறிமுதல்

Tn_vnr_02_sand_theft_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 டிராக்டர் அளவுள்ள திருட்டு மணல்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து பதுக்கி வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான செண்பகத்தோப்பு செல்லும் வழியில் மொட்ட பெத்தான் கண்மாய் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் அப்பகுதி முழுவதும் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மெட்ட பெத்தான் கண்மாய் அருகே மர்மநபர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 டிராக்டர் அளவுள்ள திருட்டு மணல்களை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து காவல்துறையினர் உதவியுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கபட்டுள்ளது.பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல்களை யார் வைத்திருந்தது என்று அப்பகுதி முழுவதும் தீவிர விசாரணை நடைபெற்று நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு திருட்டு செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Nov 23, 2019, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.