விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேவுள்ள பி.புதுப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனிடையே கணவன் மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனித்தனியே வாழ்ந்துவருவதாக கூறப்படுகிறது.
கலைச்செல்வி தனது தாயாருடன் காரியாப்பட்டியில் வசித்துவந்துள்ளார். இதையடுத்து செந்தில்குமார் கலைச்செல்வியின் தாயார் வீட்டுக்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த கலைச்செல்வியின் அண்ணன் கணேசமூர்த்தி, செந்தில்குமாரிடம் இது குறித்து கேட்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது இவர்கள் இருவருக்கு இடையே கைகலப்பு ஏற்படவே, செந்திகுமார், அவரது தம்பிகள் ஆனந்த் குமார், செல்வ குமார் ஆகிய மூவரும் இணைந்து கணேசமூர்த்தியை பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கணேசமூர்த்தியை அருகிலிருந்தவர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் கணேசமூர்த்தி நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் செந்தில்குமார், அவரது சகோதரர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தங்கையின் குடும்பத் தகராறை கேட்கச் சென்றவர் அடித்துக்கொலை-செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'தலையை வெட்டி காணிக்கையாக்குவேன்' - குடிபோதையில் டிக்டாக் செய்த இளைஞர் கைது