விருதுநகர் மாவட்டம் கூரைக்கூண்டு ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கீழ் இயங்கிவரும் நெகிழிக் கழிவு குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான 20 டன் நெகிழிக் கழிவுகள் எரிந்து நாசமானது.
மேலும் கட்டுக்கடங்காத தீ அருகிலிருந்த சலூன் கடை, உணவகத்திற்கு வேகமாகப் பரவியது. இதையடுத்து, விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் அடிக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இந்தத் தீ விபத்து குறித்து விருதுநகர் டவுன் பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!