ETV Bharat / state

அரசு கலைக் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்! - விழுப்புரம்

விழுப்புரம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விழுப்புரம் பகுதியில் உள்ள மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரசு கலை கல்லூரியில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்!
author img

By

Published : Apr 27, 2019, 12:22 AM IST

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 85.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதைத்தொடர்ந்து மேல்படிப்புக்காக விரும்பும் மாணவர்கள் அதிகளவில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் உள்ள படிப்புகளையே விரும்புகின்றனர்.

இதற்காக விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 23ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

எஸ்.சி, எஸ்,டி மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாகவும், பொதுப்பிரிவினருக்கு ரூ.50 என்ற அடிப்படையிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. வாங்கிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 3ஆம் தேதி கடைசி நாளாகும்.

அரசு கலைக் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்!

கல்வி கட்டணம் குறைவு, தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதி, நகரின் மைய பகுதியில் அமைந்திருக்கும் பழமையான கல்லூரி என்பதால் இந்த கல்லூரியில் சேர மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாணவிகள் பேட்டி

Intro:விழுப்புரம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விழுப்புரம் பகுதியில் உள்ள மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Body:தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 85.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இதைத்தொடர்ந்து மேல்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் அதிகளவில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் உள்ள படிப்புகளையே விரும்புகின்றனர்.

இதற்காக விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 23ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விண்ணப்பங்களை தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாங்கிச் செல்கின்றனர். எஸ்.சி, எஸ்,டி மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாகவும், பொதுப்பிரிவினருக்கு ரூ.50 என்ற அடிப்படையிலும் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.

வாங்கிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 3 ஆம் தேதி கடைசி நாளாகும்.

Conclusion:கல்வி கட்டணம் குறைவு, தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதி, நகரின் மைய பகுதியில் அமைந்திருக்கும் பழமையான கல்லூரி என்பதால் இந்த கல்லூரியில் சேர மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த கல்லூரியில் சேர போட்டி போடும் மாணவர்களின் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.