விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இந்த நீச்சல் போட்டியில் சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40 பள்ளிகள், 25 கல்லூரிகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த நீச்சல் போட்டியில் ப்ரீ ஸ்டைல், ஃபர்ஸ்ட் ஸ்டிரோக், பேக் ஸ்டிரோக், பட்டர்ஃபிளை, மெட்லே போன்ற 8 பிரிவுகளில் 84 போட்டிகள் நடைபெற்றன. மேலும் இதில் 1 வகுப்பு முதல் 5 வகுப்புவரை படிக்கு குழந்தைகள் அதிகளவில் பங்கேற்று பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையான தர்மராஜன் சுழற் கோப்பையை ஆண்கள் பிரிவில் சென்னை டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியும், பெண்கள் பிரிவில் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகமும் பெற்று அசத்தியுள்ளது.
இதையும் படிங்க:ப்ரியம் கார்க் சதத்தால் வெற்றியுடன் கணக்கை தொடங்கிய இளம் இந்தியா