ETV Bharat / state

மாநில அளவிலான சப் ஜூனியர் வாள் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்!

விருதுநகர்: மாநில அளவிலான 22ஆவது சப் ஜூனியர் வாள் விளையாட்டு போட்டிகள் இன்று முதல் தனியார் பள்ளியில் தொடங்கின.

author img

By

Published : Feb 27, 2021, 10:39 PM IST

state-level-sub-junior-sword-games-begin

விருதுநகர் மாவட்ட வாள் விளையாட்டு சங்கம் நடத்தும் மாநில அளவிலான 22ஆவது வாள் விளையாட்டு போட்டிகள் விருதுநகர் நோபல் பள்ளியில் தொடங்கியது. 14 வயதிற்கு உள்பட்டவர்களான இப்போட்டி ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெறுகிறது.

பாயில், எப்பி, சேப்பர் என 6 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. தனியாகவும், குழுவாகவும் இரண்டு நாள்கள் நடைபெறும் இப்போட்டிகளில் சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சப் ஜூனியர் வாள் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்

இவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மார்ச் 8ஆம் தேதி கன்னியாகுமரியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு மார்ச் 24 முதல் 26 வரை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்கள்.

இதையும் படிங்க: மகளிர் உள்ளூர் கிரிக்கெட் தொடர் மார்ச் 11 முதல் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.