தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருக்கோயில்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. உற்சவங்களின் போதும் சுவாமி வீதி உலாவின்போதும் இந்த யானைகள் ஊர்வலத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்பட்டு வரும் யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் வருடந்தோறும் நடைபெறும்.
48 நாள் நடைபெறும் இந்த நலவாழ்வுமுகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு உடல் ஆரோக்கியத்திற்காக சிறப்பு உணவுகள், மன ஆரோக்கியத்திற்காக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். யானைகளுக்கு மட்டுமல்லாது யானை பாகன்களுக்கும் யானையை பராமரிப்பது குறித்து சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
அதனடிப்படையில் இந்த வருடத்திற்கான யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பகுதியில் ஆரம்பமாக உள்ளது. அதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் வளர்க்கப்பட்டு வரும் ஜெயமால்யதா என்ற யானை இன்று (பிப்.8) அதிகாலை லாரி மூலம் அழைத்து செல்லப்பட்டது. முன்னதாக திருக்கோவில் சார்பில் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: நெமிலிச்சேரி-மீஞ்சூர் 6 வழிச்சாலையைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்