1940ஆம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதற்கான சங்கம் 1945 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த சங்கம் கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, தற்போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தயார் செய்யக்கூடிய 31 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் 32வது பொருளாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் வியாபாரி சங்கத்தினர், ”ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா புவிசார் குறியீடு வழங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இது இப்பகுதிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உள்ளது” என்றார்.