உலகையே உலுக்கும் கரோனாவால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை்தொடர்ந்து, விருதுநகரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூக்குழி திருவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் மார்ச் 31ஆம் தேதி வரை தடைவிதித்துள்ளார்.
இந்தக் கோயிலில் மார்ச் மாதம் நடைபெறும் பூக்குழி திருவிழாவிற்கு லட்சக்கணக்காண மக்கள் வருகை தருவார்கள். ஆயிரக்கணக்காண வாகனங்கள் நிறுத்தப்படும். மக்கள் நலன் கருதி பூக்குழி திருவிழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா ஒத்திவைப்பு