விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவையன்று ஏழுமலையானுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த கருடசேவையின் போது மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் இன்று திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக செப். 30ஆம் தேதி அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும்.
இந்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகளை திருப்பதி கோயிலின் சார்பில் ஸ்தானிகர் பிரசன்னா வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நான்கு சக்கர வாகனம் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க:பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் இரட்டிப்பாக அதிகரிப்பு