ETV Bharat / state

சின்ன மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டயை தடுக்க வந்த சின்ன மாமியாரை கத்தியால் கழுத்தில் குத்திக் கொன்ற மருமகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Arrest
Arrest
author img

By

Published : Jul 3, 2021, 5:28 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஓட்டுநர் காசி ஈஸ்வரன். இவர் பாண்டிச்செல்வி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில், இந்த காதல் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (ஜூலை.3) காசி ஈஸ்வரன் குடிபோதையில் இருந்தபோது பாண்டிச்செல்வியை அடித்துள்ளார். இதை பாண்டிச்செல்வியின் சித்தி ராஜலட்சுமி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த காசி ஈஸ்வரன், ராஜலட்சுமியின் கழுத்தியில் கத்தியால் குத்தினார்.

Arrest
கைது செய்யப்பட்ட காசி ஈஸ்வரன்

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், பாண்டிச்செல்வியின் உறவினர்கள் காசி ஈஸ்வரனை தாக்கினர். இதில் காயம் அடைந்த காசி ஈஸ்வரன் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் ராஜலட்சுமியும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காசி ஈஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வில்வித்தை வீரரின் மூக்கை அறுத்த நபர்: தேடுதல் வேட்டையில் காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.