ETV Bharat / state

'வெடிக்கத் தடை... சிவகாசிக்கு திருப்பி அனுப்பப்படும் பட்டாசுகள்': வேதனையில் பட்டாசு விற்பனையாளர்கள்! - sivakasi workers worry in diwali

விருதுநகர்: வெளிமாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடைவிதித்துள்ளதையடுத்து, அதனை கொள்முதல் செய்தவர்கள் மீண்டும் சிவகாசிக்கு திருப்பி அனுப்பி வைப்பதால் பட்டாசு விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

crackers
பட்டாசு
author img

By

Published : Nov 9, 2020, 1:27 PM IST

Updated : Nov 10, 2020, 2:40 PM IST

தீபாவளிப் பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அதை ஒவ்வொருவரும் அவர்களது வசதிக்கு ஏற்றார்போல கொண்டாடினாலும், அனைவர் வீட்டிலும் தவிர்க்கமுடியாததாக இருப்பது பட்டாசுகள் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை விரும்பாதவர் வெகு சிலரே.

இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தான் பட்டாசுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 90 விழுக்காடு, இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தப் பகுதியில் சுமார் 1100க்கும் மேற்பட்ட ஆலைகளும், அதில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் இத்தொழிலை நம்பியுள்ளனர். ஆண்டு முழுவதும் இவர்கள் தயாரிக்கும் பட்டாசுகள் தீபாவளிப் பண்டிகையின்போது தான் பெருமளவில் விற்பனையாகும். இந்த விற்பனை தான் இவர்கள் வாழ்வாதாரத்தின் அடிநாதம். கடந்த சில ஆண்டுகளாக, இந்த விற்பனை பல நெருக்கடிக்களுக்கு மத்தியில் தான் நடந்தது.

ஜி.எஸ்.டி விதிப்பு, பசுமை பட்டாசு பிரச்னை, சீனப் பட்டாசு வருகை போன்ற பாதிப்புகளால் ஏற்கனவே பட்டாசு விற்பனை வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. இதனால் உற்பத்தியும் பெருமளவில் குறைந்தது. இந்தாண்டு கரோனா பொதுஊரடங்கு இத்தொழிலாளர்களை மேலும் முடக்கியது. கிட்டத்தட்ட 50 நாள்கள் பட்டாசு ஆலைகள் மூடியே கிடந்தன. அவை மீண்டும் திறக்கப்பட்டதும்; கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் குறைந்த அளவு பட்டாசுகளே உற்பத்தி செய்யப்பட்டன.

இந்த வாரம் தீபாவளிப் பண்டிகை நெருங்கும்போது உற்பத்தி செய்த அனைத்துப் பட்டாசுகளும் விற்றுத்தீர்ந்து தங்களுக்கும் கொண்டாட்டத்தைக் கொடுக்கும் என தொழிலாளர்கள் காத்திருந்த நிலையில் ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிவகாசியிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு 12 விழுக்காடு பட்டாசுகள் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஒடிசா அதிகளவில் இல்லையென்றாலும் குறைந்தபட்சம் 3 விழுக்காடு வரை கொள்முதல் செய்யும். ஆனால், இந்தமுறை வாங்கிய பட்டாசுகளைத் திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக பட்டாசு விற்பனையாளர் சாந்தி மாரியப்பன், 'வெளிமாநிலங்களில் பட்டாசுக்குத் தடை விதிக்கப்பட்டதால், மிகுந்த சிரமங்களுக்கு இடையே உற்பத்தி செய்த பட்டாசுகள் மீண்டும் சிவகாசிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கரோனா அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் கடைக்குப் பட்டாசு வாங்க வருவதில்லை. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஓரளவு விற்கிறோம். தமிழ்நாட்டிலும் வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் விற்பனையின் பின்னடைவிற்கு காரணம்தான்' என்றார்.

சிவகாசியைத் தவிர, பிற இடங்களில் பட்டாசு விலை அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கும் வாடிக்கையாளர் விக்னேஷ், பட்டாசு வாங்க வருபவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைவாக இருப்பதாகவும் கூறுகிறார்.

சிவகாசிக்கு திருப்பி அனுப்பப்படும் பட்டாசுகள்

தீபாவளி பண்டிகையே பட்டாசு சத்தங்களினால் தான் முழுமைபெறும். இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு பட்டாசு வெடிக்க கால வரையறை குறைவாக நிர்ணயித்துள்ளது, பட்டாசுத் தொழிலில் ஈடுபட்ட 8 லட்சம் தொழிலாளர்களையும் பாதிக்கும். கூடுதல் நேரம் வழங்கினால், பட்டாசு விற்பனை அதிகரிக்கும்; அதுவே பட்டாசு தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் தீபாவளியாக இருக்கும்.

இதையும் படிங்க:சரிந்த பட்டாசு உற்பத்தி: தீபாவளியில் பட்டாசு பரிசு பெட்டி விற்பனை வீழ்ச்சி!

Last Updated : Nov 10, 2020, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.