ETV Bharat / state

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு படையெடுக்கும் பக்தர்கள்

விருதுநகர்: பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு படையெடுக்கும் பக்தர்கள்

author img

By

Published : Jan 11, 2021, 7:12 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை நான்கு நாள்கள், பௌர்ணமி நான்கு நாள்கள் என மொத்தம் எட்டு நாள்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் பிரதோஷம், அம்மாவாசை, பொங்கலை முன்னிட்டு 14ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல கோயில் நிர்வாகம், வனத்துறை அனுமதி வழங்கியுள்ளன. பிரதோஷத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க... பாரியூர் கொண்டத்துகாளி கோயில் தேரோட்டம்: குறைவான பக்தர்களே பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.