வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் (பொறுப்பு சத்துவாச்சாரி காவல் நிலையம்) இன்று (பிப்.14) காலை போலீசார் உடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பாபு என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசியவாறு வந்தாக தெரிகிறது.
அதைக் பார்த்த ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சீனிவாசன் இருசக்கர வாகனத்தை மடக்கி, நிறுத்தி இருசக்கர வாகனத்தை விட்டு கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து, பாபுவும் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, போலீசாரிடம் சென்றுள்ளர்.
அப்போது ஆய்வாளர் செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுகிறாய் எனக் கூறி அடித்ததாக தெரிகிறது. இதையடுத்து, பாபு ஆய்வாளரிடம் என்னை ஏன் அடித்தீர்கள்? என வாக்குவாதம் ஏற்பட்டுள்ளார். மேலும் வாக்குவாதத்தின் போது ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் சீனிவாசன், பாபுவை குண்டு கட்டாக பாபுவை தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்.
இதையும் படிங்க: "போதைப் பொருள் தடுப்புப் பணியில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது" - டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்!
போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்த பாபு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனால், மேலும் ஆதிரமடைந்த காவல் ஆய்வாளர் பாபுவின் கால் வாகனத்தின் வெளியே நீட்டப்பட்டிருந்த நிலையில் அவரை உள்ளே தள்ளி கதவை வேகமாக மூடியுள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த மக்கள் படம் பிடித்து, இணையத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.