விருதுநகர் அருகே சூலக்கரை முல்லை நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மாரிமுத்து. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று வெளியூர் சென்று, இன்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார்.
உடனே சூலக்கரை காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த சூலக்கரை காவல் துறையினர், சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சேகரித்தனர்.
விசாரணையில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திருடிச் சென்ற கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தை சந்தேக மரணம் - பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்!