விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அப்பகுதி அருகே இடங்களை வழங்கியது. அதில் மலை வாழ் மக்கள் வீடுகளை கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்களை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் மிரட்டி இடங்களைப் பறித்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மலைவாழ் சிறுவர்கள் கல்வி பயில உந்துதலாக நிற்கும் ஆசிரியை