ETV Bharat / state

'ரஜினி படங்கள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்' - மனம் திறந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! - rajendra balaji interview

விருதுநகர்: நடிகர் ரஜினி மீது எந்த காட்டமும் தனக்கில்லை என்றும், அவர் படங்களைத் தான் மிகவும் விரும்பிப் பார்ப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Rajini films are my favourite, says minister rajendra balaji
author img

By

Published : Nov 14, 2019, 4:48 PM IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத் துறை சார்பாக திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் 1.05 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இலவச போட்டித் தேர்வு மையத்தை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தனியார் பங்களிப்போடு தொடங்கப்பட்ட முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ’ஆவின் பால் பாக்கெட்டில் திருவள்ளுவர் உருவம் அச்சிடுவது பற்றியும் பரிசீலனை செய்யப்படும். இன்னும் 15 நாட்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் இடம்பெறும். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக உடனான கூட்டணி தொடரும் என்று அதிமுக தலைமை கூறியுள்ளது. அவர்கள் முடிவுக்கு அதிமுகவில் உள்ள அனைவரும் கட்டுப்படுவோம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

அதிமுகவினருக்கு ரஜினி, கமல் மீது எந்தக் காட்டமும் இல்லை. அவர்கள் கூறும் கருத்துக்குத்தான் நாங்கள் பதிலளித்து வருகிறோம். இருவரின் திரைப்படத்தையும் நாங்கள் விரும்பிப் பார்ப்போம். குறிப்பாக நான் ரஜினியின் படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன்" என்றார்.

இதையும் படிங்க: வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க. அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.