ETV Bharat / state

ராஜபாளையம் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழப்பு - ராஜபாளையம் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழப்பு. சிசிடிவி காட்சி

ராஜபாளையம் முடங்கியார் சாலையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், வடக்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

author img

By

Published : Jan 10, 2022, 2:46 PM IST

விருதுநகர்: ராஜபாளையம் முடங்கியார் தெரு சாலையில் உள்ள சோமையாபுரத்தைச் சேர்ந்த ஜனகன் என்பவரது மனைவி பொன்னழகு (32), ஜனகன் தற்போது சவுதி அரேபியாவில் பணியாற்றிவரும் நிலையில், பொன்னழகு தனது மகள்கள் இருவருடன் வசித்துவந்தார்.

இந்நிலையில் பகல் சுமார் ஒரு மணி அளவில் மருந்து வாங்குவதற்காக பொன்னழகு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். காந்தி சிலை அருகே இவரது வாகனம் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சேலத்திலிருந்து கடையத்திற்கு சோப்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி இவரது வாகனத்தின் பின்புறம் மோதியது.

இதில் நிலைகுலைந்து தவறிவிழுந்த இவரின் தலையில் லாரி சக்கரங்கள் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். இவரது உடலைக் கைப்பற்றிய வடக்கு காவல் நிலைய காவலர்கள் உடற்கூராய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

லாரி ஓட்டுநர் கைது

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரைக் கைதுசெய்துள்ள காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். விபத்து நடந்த காட்சி அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்தக் காட்சியில் லாரி வெடித்து இருசக்கர வாகனம் நிலைகுலைந்து விழும் காட்சி பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: செம்மொழி தமிழாய்வு நிறுவனம்: 12ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.