விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஆற்றில் வரும் தண்ணீர்தான் இராஜபாளையம் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மழை காலங்களில் இந்த ஆற்றில் வரும் தண்ணீரை தடுப்பணைகள் மூலம் சேமித்து அதன் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், இராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் மழைபெய்து வருகிறது. இதன்காரணமாக அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இராஜபாளையம் பகுதியில் மழை: அய்யானார் கோயில் ஆற்றில் வெள்ளம்! - அய்யானார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
விருதுநகர்: இராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.