விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்துள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன் (44). இவர், கள்ளச்சாராயம் விற்பனைக்காக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இரண்டு பேரல்களில் சாராய ஊறல் வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
காவல் துறையினர் வருகையை அறிந்த காசிராஜன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், அங்கு சென்ற காவல் துறையினர், விற்பனைக்காக வைத்திருந்த 200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.
மேலும், ஊறலுக்குப் பயன்படுத்திய சில பொருள்களையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். தொடர்ந்து காசிராஜன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.