விருதுநகர்: Job racket complaint against Rajendra Balaji: ஆவின் உள்ளிட்டப் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எட்டு தனிப்படைகள் அமைத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் வெம்பக்கோட்டை அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி மூலம் ராஜேந்திரபாலாஜி, ஏழு பேரிடம் 78 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் பாதிக்கப்பட்ட ஏழு பேர் நேரில் மற்றும் இணையம் மூலமாகப் புகார் அளித்தனர்.
இந்நிலையில் புகார் குறித்த முகாந்திரம் குறித்து காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. புகார் அளித்த சாத்தூர் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த ஹரிபாலு, மம்சாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார், சிவகாசியைச் சேர்ந்த குணா தூய மணி, ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வெங்கடாசலம், மதுரை வில்லாபுரம் மீனாட்சி சுந்தரம், மதுரை கோமதிபுரம் செல்வராஜ், நெய்வேலி ஜோசப் ஆகிய ஏழு பேருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட உள்ளது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: SBI form in Hindi: மீண்டும் ஹிந்தி சர்ச்சை: பாரத ஸ்டேட் வங்கியில் ஹிந்தியில் விண்ணப்பப் படிவம்