ETV Bharat / state

காவல் துறையினருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்த மக்கள்!

விருதுநகர்: கரோனோ விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பொதுமக்கள் பொன்னாடை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் கெளரவித்தனர்.

காவல் துறையிருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கவுரவித்த பொதுமக்கள்.!

author img

By

Published : May 6, 2020, 2:12 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து பாதுகாப்புப் பணியில் இரவு, பகல் பாராமல் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் பாதுகாப்புப் பணியில், தனது குடும்பத்தையும் மறந்து வெயில், மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்காக காவல் துறையினர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கரோனா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினரை கெளரவிக்கும் விதமாக, சாத்தூர் ஹோட்டல், மற்றும் பேக்கரி, மார்க்கெட் வியாபாரிகள், ஸ்வீட் ஸ்டால் சங்கத்தினர் இணைந்து சாத்தூர் நகர காவல் துணைக் காண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சுப குமார் மற்றும் சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் கெளரவித்தனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை துணைக் கண்கணிப்பாளர் ராமகிருஷ்ணன், வருகின்ற 07.05.2020 அன்று முதல் (டாஸ்மாக்) அரசு மதுபானக் கடைகள் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை செயல்படும் என்றும், அப்போது மதுபானப் பிரியர்கள் அனைவருக்கும் டோக்கன் முறையில் அனுமதிக்கப்படுவதாகவும், ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவே மது பானங்கள் விற்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக் கவசங்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் கூறினார். மற்ற கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட வேண்டும், வியாபாரிகள் கையுறை மற்றும் முகக் கவசங்கள் கண்டிப்பாக அணிந்து தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:

கரோனா பாதுகாப்பு - தருமபுரியில் மேற்கு மண்டல ஐஜி ஆய்வு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.