விருதுநகர்: வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், சிவகாசி அருகே உள்ள சுவரம்பட்டி பகுதியில் செல்லக்கூடிய அர்ஜுனா நதியின் தரைப்பாலம் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.
சுமார் 20 கிராமங்கள் பயணிக்க கூடிய இந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுவதால் சுமார் 12 கிலோமீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது நீர் குறைந்து காணப்படக்கூடிய நிலையில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, திடீரென இந்த பகுதியில் நீர்வரத்து காணப்படுவதாகவும், இதனால், இந்த சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை வெற்றி; அதன் சிறப்பம்சங்கள் என்ன?