விருதுநகர்: விருதுநகர் - மதுரை சாலையில் அமைந்துள்ள மாவட்டப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாகப் பத்திரப் பதிவு செய்யவில்லை எனக் கூறி இருபதுக்கும் மேற்பட்டப் பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாணையால் ஏற்பட்ட தர்ணா போராட்டம்:
5,000 சதுர அடிக்கும் மேல் இருக்கும் இடங்கள் பத்திரப்பதிவு செய்யப்படாது என நேற்று அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இன்று விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவை நிறுத்தியுள்ளனர். இதே போல் 5,000 சதுர அடிக்கும் மேல் உள்ள இடங்களைப் பதிவு செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் ஆகும்.
அதற்கானக் கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியும்; பத்திரப்பதிவை நிறுத்தியதால் ஆத்திரமடைந்தப் பொதுமக்கள், பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து, விரைந்து வந்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதால், பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க:'துணைவேந்தராக சூரப்பா இருந்தபோது முறைகேடு... ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்'