ETV Bharat / state

பிளவக்கல், கோவிலாறு, சாஸ்தா கோயில் அணைகளில் நீர் திறப்பு - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல், கோவிலாறு, சாஸ்தா கோயில் ஆகிய அணைகளிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணைகளில் தண்ணீர் திறப்பு
அணைகளில் தண்ணீர் திறப்பு
author img

By

Published : Nov 22, 2021, 6:17 PM IST

விருதுநகர்: வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல், கோவிலாறு, சாஸ்தா கோயில் ஆகிய அணைகளிலிருந்து பாசனத்துக்காக நீர் திறந்துவிடும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன் ஆகியோர் முன்னிலையில் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் மலர் தூவி அணைகளில் இருந்து நீரை திறந்துவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பிளவக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் 5 நாள்களுக்கும், பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்துக்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும்.

அணைகளில் நீர் திறப்பு

அணைகளில் நீர் திறப்பு

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து வரத்து கால்வாய்கள் மூலம் 40 கண்மாய்கள் மற்றும் நேரடி பாசனம் மூலமாக 8,500 ஏக்கர் பாசன வசதி பெறும்.

சாஸ்தா கோயில் அணையிலிருந்து 8 நாள்களுக்கு வினாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,130 ஏக்கர் பாசன வசதி பெறும்" என்றார்.

இதையும் படிங்க: வேன் மோதி போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழப்பு: ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.