ETV Bharat / state

சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இல்லை

விருதுநகர்: ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு நோய் தொற்று இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

aids
author img

By

Published : Mar 22, 2019, 12:37 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாத்தூரைச் சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருக்கும் ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் ரத்தத்தை தானமாக வழங்கிய கமுதியைச் சேர்ந்த இளைஞர் குற்றவுணர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கிடையே ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்தக் குழந்தைக்கும் நோய் தொற்று இருக்குமோ என அஞ்சப்பட்டது. இதனையடுத்து அக்குழந்தைக்கு சில வாரங்களுக்கு முன்பு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இல்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், ஆறு மற்றும் 18 மாதங்களில் குழந்தைக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.