ETV Bharat / state

கழிப்பறைகளுக்கு தண்ணீர் குழாய் இணைப்பு கடனுதவி திட்டம் அக். 2இல் தொடக்கம்! - NABARD Bank

விருதுநகர்: கழிப்பறைகளுக்கு தண்ணீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு கடனுதவி திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கப்படும் என்று நபார்டு வங்கித்தலைவர் சிந்தாலா தெரிவித்துள்ளார்.

NABARD Bank Chairman Sindhala Press Meet In Virudhunagar

author img

By

Published : Sep 16, 2020, 7:00 PM IST

விருதுநகர் மாவட்டம், அருகேயுள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் பங்குதாரர்களைக் கொண்டு இயங்கும் சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா பார்வையிட்டார்.

அப்போது, மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிக்கும் முறைகளையும் அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர்ல், "சீட்ஸ் போன்ற உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் நபார்டு வங்கி குறைந்த வட்டியில் பல்வேறு வகையான கடன் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.

சுமார் 90 லட்சம் வியாபார குழுக்களுக்கு நபார்டு வங்கி கடனுதவி அளித்துள்ளது. உணவுப்பொருள் உற்பத்திக்கான சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கிவைக்க உள்ளோம்.

இரு நாள்களில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அப்போது, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் உரம் தயாரிக்க திட்டங்கள் வழங்குமாறு தெரிவிக்க உள்ளோம்.

தனி நபரால் சாதிக்க முடியாததை குழுவாக இருந்து விவசாயிகள் சாதிக்க முடியும். நாடு முழுவதும் சுமார் 12 கோடி கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி இல்லாததால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே கழிப்பறைகளுக்கு தண்ணீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு கடனுதவி திட்டத்தையும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்க உள்ளோம்.

கரோனா காலத்தில் விவசாய குழுக்களுக்கு குறைந்த வட்டியில் நபார்டு வங்கி பல்வேறு கடன் உதவிகளை வழங்கியுள்ளது. அதன்மூலம், விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா காலத்தில் 68 விழுக்காடு வரை பாதிக்கப்பட்டது குடும்ப பெண்கள் என்பதால் அவர்களுக்கு குழு சார்ந்த கடன்கள் வழங்குவதில் நபார்டு வங்கி தனி கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் பெண்களுக்கு கடன் வழங்குவதன் மூலமாகவும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு கடன் வழங்குவதன் மூலமாகவும் கிராம பொருளாதாரமும் அதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்துள்ளது" எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.