கடந்த சில நாள்களுக்கு முன்பு ரயில்வேத் துறையில் தனியார் மயமாக்கல் குறித்த அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டது. இது குறித்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் கண்டன பதிவை காணொலி வாயிலாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “மத்திய அரசு ரயில்வேத் துறையை தனியார்மயமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. தற்போது 119 வழித்தடங்களில் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்க உள்ளது. தென்னக ரயில்வேத் துறையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களிலும், தனியாருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. தனியார்மயத்தை கைவிட வேண்டும்.
-
நரேந்திரன்/ ஷா வின் நண்பர்கள் அம்பானியும் அதானியும் செழிக்க ரயில்வே தனியார் கையில்? நாடாளுமன்றத்தில் எதிர்பேன் ! விருதுநகரில் தனியார் ரயிலை மறிப்பேன்👍 pic.twitter.com/ofCcelpyVO
— Manickam Tagore MP🇮🇳✋மாணிக்கம் தாகூர் (@manickamtagore) July 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நரேந்திரன்/ ஷா வின் நண்பர்கள் அம்பானியும் அதானியும் செழிக்க ரயில்வே தனியார் கையில்? நாடாளுமன்றத்தில் எதிர்பேன் ! விருதுநகரில் தனியார் ரயிலை மறிப்பேன்👍 pic.twitter.com/ofCcelpyVO
— Manickam Tagore MP🇮🇳✋மாணிக்கம் தாகூர் (@manickamtagore) July 4, 2020நரேந்திரன்/ ஷா வின் நண்பர்கள் அம்பானியும் அதானியும் செழிக்க ரயில்வே தனியார் கையில்? நாடாளுமன்றத்தில் எதிர்பேன் ! விருதுநகரில் தனியார் ரயிலை மறிப்பேன்👍 pic.twitter.com/ofCcelpyVO
— Manickam Tagore MP🇮🇳✋மாணிக்கம் தாகூர் (@manickamtagore) July 4, 2020
இந்த தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்றத்தில் இதை எதிர்ப்போம். மேலும், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் எந்த ஒரு தனியார் மயமாக்கப்பட்ட ரயில்களையும் அனுமதிக்க மாட்டோம், மறியல் செய்தாவது அதனை தடுத்து நிறுத்துவேன். எனவே மத்திய அரசு ரயில்களை தனியார் மயமாக்கும் முடிவை உடனடியாக நிறுத்தவேண்டும்.
அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் அதிக லாபம் ஈட்டுவதற்கு எங்கள் பகுதியைத் தாரை வார்ப்பதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'ரயில்வேத் துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது'- நாராயணசாமி