ETV Bharat / state

சென்னை மெட்ரோ நிலையங்களில் மாதாந்திர வாகன பார்க்கிங் பாஸ்கள், CMRL டிராவல் கார்டு வசதி நிறுத்தம்! - CHENNAI METRO

சென்னை மெட்ரோ நிலையங்களில் CMRL டிராவல் கார்டுகள் மற்றும் மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ, எக்ஸ் தள பதிவு
சென்னை மெட்ரோ, எக்ஸ் தள பதிவு (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 4:04 PM IST

சென்னை: சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கொண்டு வரப்பட்ட மெட்ரோவில், நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களையும் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சென்னையில் பெரும்பாலான மெட்ரோ நிலையங்களில் வாகன நிறுத்துமிடங்களில் இடம் கிடைப்பது பெரும் பாடாக இருந்து வருகிறது. மேலும், CMRL டிராவல் கார்டு மூலம் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் செலுத்தினால், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதனை நிறுத்தப் போவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு வருமாறு:

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், 01-02-2025 முதல் வாகனங்களுக்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ் வழங்குவதை நிறுத்த CMRL நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் பயணிகளுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட உள்ளன. ஜனவரி 2025 இல் ஏற்கனவே வாங்கப்பட்ட வாகன மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும்.

CMRL டிராவல் கார்டு டாப் அப் வசதியை நிறுத்தம்!

இதே போல், CMRL டிராவல் கார்டு ரத்து செய்வதற்கு CMRL நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் அதற்கு பதிலாக சிங்கார சென்னை அட்டை மற்றும் National Common Mobility Card -ஐ CMRL அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி 01-04-2025 முதல் சிங்கார சென்னை கார்டு மற்றும் National Common Mobility Card முழுமையாக மாற CMRL திட்டமிட்டுள்ளது. இந்த கார்டு வசதியை SBI வழங்குகிறது. அதன்படி, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் படிப்படியாக CMRL பயண அட்டைகளை டாப் அப் செய்வதை நிறுத்த CMRL திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, OTA - நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் ஷெனாய் நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் CMRL டிராவல் கார்டு (CSC) விற்பனை / டாப் அப்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் டாப்-அப் CMRL பயண அட்டைகளுக்கான டிக்கெட் கவுன்டரை அணுகும் பயணிகள், CMRL பயண அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணித்தும் அல்லது மெட்ரோ பார்க்கிங்கில் வாகனங்களை பார்க்கிங் செய்தும் தங்களது அட்டைகளை பயன்படுத்தி அதில் டாப் அப் செய்த பணத்தை முழுவதுமாக காலி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கண்ட செயல் முறை மற்ற மெட்ரோ நிலையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு சென்னை மெட்ரோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.