விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள மேல காந்திநகர்ப் பகுதியில் அதிமுகவினர் வாக்குக்குப் பணம் கொடுப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சாத்தூர் நகர் காவல் துறையினர், தேர்தல் பறக்கும்படையினரின் உதவியுடன் இன்று(ஏப்.2) அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான தங்கராஜ்(44), குணசேகர்(47) ஆகியோர் வாக்குக்குப் பணம் கொடுத்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தங்கராஜ், குணசேகர் ஆகிய இருவரிடமிருந்து ரூபாய் 47ஆயிரம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மேலகாந்திநகர்ப் பகுதி வாக்காளர்களின் பெயர், வரிசை எண் கொண்ட நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மேக்னசைட் சுரங்க தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு!