ETV Bharat / state

'மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலம் பொற்காலம்'- அமைச்சர் சேகர் பாபு - பக்தியே இல்லை என்று குற்றஞ்சாட்டப்படும் திமுக ஆட்சியில்

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று வருங்காலங்களில் போற்றப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

'ஸ்டாலின் ஆட்சிக்காலம் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொற்காலம் என்று வரும் காலங்களில் போற்றப்படும்' - அமைச்சர் சேகர் பாபு  minister-sekar-babu-says-stalin-regnal-years-will-be-hailed-as-golden-age-in-history-of-hindu-religious-and-charitable-endowments-department

author img

By

Published : Apr 2, 2022, 10:39 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 27 ஆயிரத்து 236.600 கிராம் நகையை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யும் திட்டத்தை இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் நீதிபதி ஆர்.மாலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் நேற்று (ஏப்.1) நடைபெற்றது.

இருக்கண்குடி மாரியம்மன்  திருக்கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் காணிக்கை
இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் காணிக்கை

இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கோயில் 'நிர்வாகத்திடம் பெறப்பட்ட தங்க நகையை சாத்தூர் ஸ்டேட் வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப் படி தமிழ்நாட்டை மூன்று மண்டலங்களாகப் பிரித்து இந்த மண்டலங்களில் உள்ள கோயில்களில் உள்ள சாமிக்கு பயன்படாத நகைகளை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி சுத்த தங்கங்கங்களாக மாற்றப்படும்” என்றார்.

அமைச்சர் சேகர் பாபு,  கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன்

இறை சொத்து இறைவனுக்கே: இந்தத் தங்க கட்டிகளை வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும் என்றும் அதில் வரும் வட்டியை வைத்து அந்தந்த கோயில்களின் திருப்பணி மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து இன்று எடுக்கப்படும் 27 ஆயிரத்து 236.600 கிராம் தங்கத்தை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 24 லட்சம் வட்டியாக கிடைக்கும்.

இறை சொத்து இறைவனுக்கே என்ற முறையிலும், வெளிப்படைத் தன்மையாக இருப்போம் என்ற தாரக மந்திரத்தைக் கருத்தாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாக" தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை

பக்தியே இல்லை என்று குற்றஞ்சாட்டப்படும் திமுக ஆட்சியில்: அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், "இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வளர்ச்சி அடைய வேண்டிய கோயில்.

இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர ரூ.9 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் ரூ.43 கோடி மதிப்பீட்டில் கோயிலை புனரமைக்கும் பணி நடைபெற உள்ளது. பக்தியே இல்லை என்று குற்றஞ்சாட்டப்படும் திமுக ஆட்சியில் தான் பக்தர்களின் கோரிக்கைகள் அதிகம் நிறைவேற்றப்படுகின்றன" என்று தெரித்தார்.

ஆயிரம் கோயில்களில் விரைவில் திருப்பணி
ஆயிரம் கோயில்களில் விரைவில் திருப்பணி

ஆயிரம் கோயில்களில் விரைவில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கையில், 100 ஆண்டுகள் பழமையான ஆயிரம் திருக்கோயில்களில் விரைவில் திருப்பணி நடைபெற உள்ளது.

106 திருக்கோயில்களில் விரைவில் குடமுழுக்கு நடைபெறும். திமுக ஆட்சி வந்த பிறகு எந்தெந்த கோயில்களில் திருப்பணி நடைபெற்றது, எந்தெந்த கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

மேலும் எவ்வளவு மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது என்ற வெளிப்படைத் தன்மையை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் வெளியிட உள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொற்காலம் என்று வரும் காலங்களில் போற்றப்படும் அளவிற்கு அறநிலையத் துறை செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருப்பதி தரிசனத்திற்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புச்சலுகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.