ETV Bharat / state

மக்களுக்கு கொடுப்பது எல்லாம் அதிமுக; கெடுப்பது திமுக - ராஜேந்திர பாலாஜி - மனுக்களின் பெட்டிகளை அவர் மதுரையில் வைத்துவிட்டு சென்று விட்டார்

விருதுநகர்: மக்களுக்கு கொடுப்பது எல்லாம் நாங்கள் அவற்றை கெடுப்பது எல்லாம் திமுகவினர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : Feb 10, 2021, 8:40 AM IST

Updated : Feb 10, 2021, 8:45 AM IST

விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியாபட்டியில் 52ஆவது அம்மா மினி கிளினிக்கை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று (பிப்.09) திறந்துவைத்தார். விழாவில் கர்ப்பிணிகளுக்கு அம்மா பெட்டகம் வழங்கப்பட்டது.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "பயிர்கடன் தள்ளுபடி செய்ததை எதிர்க்கட்சிகள் தேர்லுக்காக என குறை கூறுவார்கள், தேர்தலுக்காக செய்ய வேண்டிய அவசியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அவர் மனதில் பட்டதை செய்பவர். பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை முதலமைச்சர் விதைத்து இருக்கிறார்" என்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தொடர்ந்து பேசிய அவர், "பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்தது தேர்தலுக்காக அல்ல, அதேசமயம் ஆயிரம் ரூபாய் கொடுத்ததும் இதே அதிமுக ஆட்சிதான். மக்களுக்கு கொடுப்பது எல்லாம் நாங்கள் அவற்றை கெடுப்பது எல்லாம் திமுகவினர்.

திமுக தலைவர் ஸ்டாலின் பெட்டியில் மனு வாங்குவது என்பது கபட நாடகம். விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பெறப்பட்ட மனுக்களின் பெட்டிகளை அவர் மதுரையில் வைத்துவிட்டு சென்று விட்டார். எதற்கு இந்த கபட நாடகம்; ஏமாற்றும் நாடகம்” என்று விமர்சனம் செய்தார்.

Last Updated : Feb 10, 2021, 8:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.