விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியிலுள்ள கண்மாய் தூர்வாரும் பணியை பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அச்சங்கோயில்-பம்பை வைப்பாறு இணைப்புத் திட்டம் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதால் கூடிய விரைவில் அத்திட்டம் செயல்படுத்தபடும். தமிழ்நாட்டில் கடந்த 50ஆண்டு கால வரலாற்றில் எந்த முதலமைச்சரும் செய்யாத சாதனையை எடப்பாடி பழனிசாமி படைத்து விடுவார் என்ற ஆதங்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தை குறை கூறி வருகிறார்.
திமுகவினர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் அனைவர் முன்பும் சாடுவது, அதன்பின் நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு ஜால்ரா அடிக்கும் செயலை செய்வது என இருந்து வருகின்றனர். மேலும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் திமுக தீவரவாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆகையால் இந்திய தேசியத்தின் பாதுகாப்பில் அரசியல் செயதுவரும் அவர்களுக்கு இந்தியா எல்லையான வாகாவில் பாதுகாப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு நாட்டின் மீது பற்று ஏற்படும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலை பொருத்துவரை போட்டியிடுவதற்கே அமமுகவில் வேட்பாளர்கள் இல்லை. நடிகர் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டுதான் அரசியலுக்கு மீண்டும் திரும்புவார்" என்று கிண்டலடித்தார்.