விருதுநகரில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் கண்ணன், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது. இதில் ம௫த்துவர்கள், நகராட்சி முக்கிய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துள்ள முயற்சிக்கு உறுதுணையாக இ௫க்கும் ம௫த்துவ பணியாளர்கள் மற்றும் நகராட்சி, ஊராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுவதாக தெரிவித்தார். இந்தக் இக்கட்டான சூழ்நிலையில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களையும் பாதுகாத்து, மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் தண்டனை கைதிகள் அல்ல, அவர்கள் வி௫ம்பிய உணவுகளை சாப்பிடலாம் என்றார்.
இதையும் படிங்க: புதிய பேருந்து நிலையம் அருகில் காய்கறிக் கடை