ETV Bharat / state

மூலப்பொருள்கள் விலையேற்றம்; தீப்பெட்டி ஆலைகள் ஏப்.17 வரை வேலைநிறுத்தம்! - சாத்தூர் தீப்பெட்டித் தொழிற்சாலை

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் உள்பட பல பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தீப்பெட்டி மூலப்பொருள்களின் விலை ஏற்றத்திற்கு எதிராக 11 நாள்கள் அடையாள வேலைநிறுத்தத்தை இன்று (ஏப்.6) தொடங்கியுள்ளனர்.

வேலைநிறுத்தம்
வேலைநிறுத்தம்
author img

By

Published : Apr 6, 2022, 9:33 PM IST

விருதுநகர்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தின் காரணமாகவும், மெழுகு சல்ஃபர் மற்றும் பாலித்தீன் பைகள் உள்ளிட்ட மூலப் பொருள்கள் 50 முதல் 140 சதவீதம் வரை கடுமையான விலை அதிகரித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலையும் தினம் தினம் அதிகரித்து கொண்டே வருவதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்படுவது தீப்பெட்டித் தொழிற்சாலை முதலாளிகள் மட்டுமில்லை; தீப்பெட்டிகள் உற்பத்தி செய்யும் அன்றாடக் கூலித் தொழிலாளிகளும் தான்.

தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தம்: தீப்பெட்டி பண்டல்களுக்கு முறையான விலை கிடைக்காததால் அதிக அளவிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், தீப்பெட்டி உற்பத்தி தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கு முடியாத சூழல் ஏற்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் அதனைச் சார்ந்து இயங்கும் சிறு தொழிற்சாலைகள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வாழ்வாதாரம் பாதிப்பு: இதனால், தீப்பெட்டி உற்பத்தி தொழிலையே நம்பியுள்ள சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைகளை இழந்து வாழ்வாதாரத்திற்கு அல்லல்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை இன்றி, விவசாயம் அழிந்து வரும் சூழ்நிலையில் உள்ளது. இங்குள்ள மக்களின் பிரதானமான தொழிலாக இருந்துவந்த தீப்பெட்டி தொழிலை மட்டுமே நம்பி உள்ள விருதுநகர், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, மேட்டமலை மற்றும் படந்தால் பகுதி மக்களுக்கு, தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வேலை நிறுத்த போராட்டம் பேரிடியாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: தீப்பெட்டி தொழிலாளர்கள் வாழ்வில் தீப ஒளியேற்றுவோம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.