விருதுநகர்: சாத்தூரில் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் நகராட்சிப் பணிகளை விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வுசெய்தார். பின்னர், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஊரடங்கு சமயத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. மோடி அரசுக்குத் துணைநின்று விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவளித்துள்ளது.
அதிமுக அரசு வருகிற தேர்தலில் மிகப்பெரிய தோல்வி அடைவது நிச்சயம். திமுக-காங்கிரஸ் கூட்டணி மத்திய, மாநில அரசுகளின் தோல்வியை மக்களிடம் எடுத்துச் சொல்கிறது. புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவாக இருந்துள்ளது.
இவையெல்லாம் மக்களின் மனத்தில் மிகப்பெரிய எதிர்ப்பை அதிகரித்துள்ளது. அதிமுகவின் கடைசி முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பது உறுதி. ரஜினி கட்சி ஆரமிப்பது பற்றி பேசாமல் அடுத்த படத்தைப் பற்றி பேசுவது நல்லது" என்றார்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடாதது ஏன்? - மாணிக்கம் தாகூர் கேள்வி