ETV Bharat / state

விஜயை ஒரே மேடையில் சந்திப்பாரா திருமாவளவன்? - VIJAY THIRUMAVALAVAN MEET

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், திருமாவளவன், விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக எப்படி முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

திருமாவளவன், விஜய் (கோப்புப்படம்)
திருமாவளவன், விஜய் (கோப்புப்படம்) (credit - @thirumaofficial x page and ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 7:09 PM IST

சென்னை: கடந்த மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் விக்கிவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைப்பெற்று முடிந்தது. அந்த மாநாட்டில் தவெக உடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என விஜய் பேசிய பேச்சு இன்றளவும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் பேசிய பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை விசிக வின் இரண்டாம் கட்ட தலைவர்களான வன்னி அரசு, ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆதரவு தெரிவித்தாலும், விசிக தலைவர் திருமாவளவன், ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரத்தை தவெக தலைவர் விஜய் அவசரப்பட்டு உடனடியாக அறிவித்திருக்க வேண்டாம்'' என தெரிவித்திருந்தார்.

இது ஒரு அணுகுண்டு: அதாவது திருமாவளவன், '' தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டு காலத்திற்கு முன்பே அதிகாரத்தில் பங்கு என அறிவித்ததால் வலை போடுவதற்கு முன்பே கல்லெறிவது போன்றதாகும். உண்மையிலேயே அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் விருப்பத்தோடு சொன்னதாக தெரியவில்லை. இந்த அறிவிப்பை ஏற்று எந்தெந்த கட்சிகள் வருவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

துணை முதல்வர் பதவி உண்டா அல்லது அமைச்சர் பதவிகள் மட்டும் தானா என்பதெல்லாம் குறித்து தீர்மானிக்கப்பட்ட பிறகு அறிவிக்க வேண்டிய அரசியல் யுத்தி. விஜய் வேண்டுமென்றே பேசுகிறார் என்றால் திமுக கூட்டணியில் சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி உள்ளார். அவரது பாணியில் சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு அணுகுண்டு. ஆனால், அது அவருக்கு எதிராக வெடிக்கும்'' என்றார்.

விஜயின் பேச்சு விசிகவுக்கு சாதகமாக இருக்கும் என்றே மாநாடு நடந்த அன்றைய தினம் பரவலாக பேசப்பட்டு வந்த சூழலில், அதற்கு நேர்மாறான கருத்தை திருமாவளவன் வைத்து வருவது விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த சூழலில், வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த விழாவில், அம்பேத்கர் பற்றிய நூலை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக் கொள்ள உள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரத்தில் திருமாவளவனும், விஜயும் ஒற்றை கருத்தை கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் ஷபீரிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் முன்வைத்தது.

இதையும் படிங்க: “திருமாவளவன் சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டார்” - சீமான்!

இதற்கு பதில் அளித்த அவர், '' தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும், விசிக தலைவர் திருமாவளவனும் ஒரே மேடையில் சந்திப்பது என்பது அரசியல் ரீதியாக பேசு பொருளாக மாறும். அதில் அரசியல் குறியீடுகள் எந்த வகையில் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். தவெக-வின் கருத்தியல் மற்றும் விஜயின் அரசியல் புரிதல் குறித்து திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், இதுபோன்ற புத்தக நிகழ்வில் இரு கட்சி தலைவர் கலந்துகொள்வது தொடர்பை ஏற்படுத்தி கொள்வதற்கும், ஒருவரைப் பற்றி மற்றொருவர் தெரிந்து கொள்வதற்கான ஒரு ஆரம்பமாக கூட இருக்கலாம்.

அது கூட்டணியாக மாறுகிறதா, இல்லையா என்பதை காலம் தான் முடிவு செய்யும். விஜய் கூட்டணி ஆட்சி என்று கூறுவதை திருமாவளவன் ஆட்டத்தை கலைக்கும் என்பதை போல் பார்க்கிறார். திமுகவுடன் விசிக கூட்டணி தொடர்கிறது என்றால், எதனை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தொடர்கிறீர்கள் என்ற கேள்வி வரும். வட தமிழகத்தில் விசிக ஆதரவு இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையில், கணிசமான வாக்கு வங்கியுடன் விசிக வளர்ந்த கட்சியாக உள்ளது. இந்த சூழலில், விசிக-விற்கு உரிய பிரதிநிதித்துவம் (தொகுதி எண்ணிக்கை ) கிடைக்கிறதா? ஆட்சி அதிகாரம் குறித்து பேசுகையில், அதுகுறித்து கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையிலாவது ஈடுபடுகிறார்களா என்பதை அனைவரும் கவனிப்பார்கள். இந்த சூழலில் மீண்டும் விசிக 4 தொகுதிகளுக்காக சரி என சென்றால், இவ்வளவு தான் உங்கள் அரசியலா என எதிர் கேள்விகள் வரும்'' என்றார்

விசிக தேர்தல் அலசல்: விசிகவின் தேர்தல் அரசியலை அலசி பார்த்தால், அதிமுக, திமுக, தமாக மற்றும் மக்கள் நல கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. இதில் அதிகபட்சமாக, 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் விசிக 25 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. 2006 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஆறு சீட்டுகள் கிடைத்து அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கடந்த முறை விசிக திமுகவிடம் 10 தொகுதிகளை கேட்டிருந்தது.

விசிகவின் தேர்தல் வரலாற்றில் நான்கு உறுப்பினர்களை பெற்றிருப்பது இந்த முறைதான். அதிலும், திமுக கூட்டணியில் போட்டியிட்டதாலேயே விசிக-வால் இதனை பெற முடிந்தது என பேச்சு உள்ளது. அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடையும் விசிக, திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 4 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது என சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நிலையில்தான் திருமாவளவன் ஆட்சி அதிகார முழக்கத்தை சமீப காலமாக வைத்து வருகிறார்.

திரைமறைவில் ஆட்சி அதிகாரம்: ஆனால், விஜயின் பேச்சுக்கு திருமாவளவன் எதிர்வினையாற்றி வரும் சூழலில், புத்தக விழாவில் இருவருக்குமான சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷபீர், ''விஜயின் ஆட்சி அதிகாரம் குறித்த பேச்சு விசிக, திமுக, அதிமுகவிற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. அதனால் தான் திருமாவளவன் திரைமறைவில் பேச வேண்டிய விவகாரம் என கூறுகிறார். ஏன் என்றால் திரைமறைவில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நல்லது. அவ்வாறு, நடக்கவில்லை என்றால் நல்ல எண்ணிக்கையில் தொகுதி வாங்கினோம் என்று இருக்கும். அரசியலில் எதுவும் சாத்தியமில்லை என்பதெல்லாம் ஒரு வாரத்தில் நடந்து முடிந்துவிடும்.

பெரும் வளர்ச்சிதான்: அனைத்து கட்சிகளும் 2026 தேர்தலை நோக்கி நகரும் நிலையில், தங்களுடைய பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும். தமிழக அரசியலில் புதிய கூட்டணிகளின் அச்சாரம் திருமண விழாக்களிலும், புத்தக வெளியீட்டு விழாக்களிலும் தான் பெரும்பாலும் நடந்துள்ளது. எனவே, தவெக தலைவர், விசிக தலைவர் சந்திப்பு ஒரு ஆரம்பாக இருக்கலாம். அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதே பெரும் வளர்ச்சிதான். ஆட்சியில் பங்கு என்பதே தமிழகத்தில் இல்லாத ஒரு விஷயம். அப்படி இல்லாத விஷயத்தை விஜய் முன்னிலைப்படுத்தி செயல்படுகிறார். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்ற விசிக-வின் எண்ணத்தில் ஒத்து போகிறார் விஜய்.

விஜய் உச்ச நட்சத்திரமாக இருப்பதால் தான் அவருக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. அவருக்கான ஈர்ப்பு வேறுவிதமானது. திமுக, அதிமுகவை தனியாக எதிர்க்க வேண்டும் என்றால் 20 ஆண்டுகள் அரசியலில் நிலைக்க வேண்டும். குறுகிய காலகட்டத்தில் திமுக, அதிமுகவை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்றால் கூட்டணி தான் சரியான வீயுகமாக இருக்க முடியும்.

வாக்கு வங்கி: யாருடன் ஒத்துபோகிறோதோ அவர்களுடன் கூட்டணியில் சேர்வது தான் சரியாக இருக்கும். பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என கூறினால் யாரும் யாருடன் கூட்டணி சேர முடியாது. அரசியல் ரீதியாக விஜய் தனது வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும். 2026 தேர்தலிலேயே கூட்டணி ஆட்சி என்ற தீர்மானம் என்பது வலுவான பேசு பொருளாக இருக்கும்'' என்றார்.

இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணியா? விளக்கம் அளித்த திருமாவளவன்!

தேர்தல் அரசியலை பொறுத்தவரை அதிகாரத்தின் பக்கம் செல்வதே திருமாவளவனின் விருப்பமாக இருந்து வருகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் சீட் பங்கீடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் கட்சி சார்ந்த முரண்பாடுகள் இருந்தாலும், திமுக கூட்டணியில் கணிசமான தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா கூட்டணியில் விசிக அங்கம் வகிக்க வேண்டிய சூழலும் உள்ளது. இந்த நிலையில் திமுகவை அரசியல் எதிரியாக கருதும் தவெக-வுடன் திருமாவளவன் கைகோர்ப்பாரா என்பதை காலம்தான் சொல்லும்.

மேலும் திருமாவளவன் - விஜய் சந்திப்பு குறித்து ஈ டிவி பாரத்திடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அதை பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை'' என்று சொல்லிவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.