ETV Bharat / state

தெலுங்கர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: கண்டனம் தெரிவித்த ஆ.ராசா.. மன்னிப்பு கோரிய கஸ்தூரி..! - KASTHURI CONTROVERSIAL SPEECH ISSUE

பிராமணர் சமூகம் உயர்வானது என நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் குற்றப்பரம்பரை என சித்தரிப்பதா திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா மற்றும் கஸ்தூரி
ஆ.ராசா மற்றும் கஸ்தூரி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 7:00 PM IST

சென்னை: பிராமணர் சமூகம் உயர்வானது என நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் குற்றப்பரம்பரை என சித்தரிப்பதா திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தெலுங்கு பேசும் மக்களிடம் நடிகை கஸ்தூரி மன்னிப்புக் கோரியுள்ளார்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பிராமண சமுகம் ஒடுக்கப்படுகிறது என்ற பெயரில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகத்தின் கவனத்தை ஈர்க்க திராவிட இயக்கத் தலைவர்களை, குறிப்பாகத் தந்தை பெரியார், கருணாநிதி உள்ளிட்டவர்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்கள். 'பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்' என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மனுதர்மம்: பண்பாட்டு அடிப்படையில் விந்திய மலைக்கு வடக்கே ஒரு வாழ்க்கை முறையும், விந்திய மலைக்கு தெற்கே ஒரு வாழ்க்கை முறையும் இருந்தது என்ற வரலாறு ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை? வானவியல், கணிதம், கட்டக்கலை, சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் பழந்தமிழர் சிறந்து விளங்கிக் கொண்டிருந்த காலத்தில், கி.மு. 3000-ல் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம் தேடி கைபர் போலன் கணவாய் வழியே உள்ளே நுழைந்தனர். கொஞ்சக் காலத்தில் பிராமணர்கள் மதத் தலைமையைக் கைப்பற்றினார்கள்.

இவர்களின் மனுதர்மம் வடக்கே உள்ள வாழ்வியல் முறையை வகுத்துத் தந்தது. மேலும், கடவுளிடம் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும், அரசாளப் பிறந்தவர்கள் சத்திரியர்கள் என்றும், வணிகம் செய்யப் பிறந்தவர்கள் வைசியர்கள் என்றும் இந்த மூன்று தரப்பினருக்கும் சேவை செய்யப் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் மனுதர்மம் கூறுகிறது.

இதையும் படிங்க: “அப்போ மேல இருந்திட்டோம்; எங்கள கீழ இழுத்து அசிங்கப்படுத்தாதீங்க” - நடிகை கஸ்தூரி

அந்த மனுதர்மம் மூலம் பிராமணர்கள் மற்ற சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி கீழ்நிலைக்குத் தள்ளினார்கள். சூத்திரர்கள், உயர் சாதியினர் வாழும் பொதுத் தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டது. கல்வி கற்கும் உரிமையும் பறிக்கப்பட்டது. கோயில்களின் உள்ளே சென்று வழிபடவும் உரிமை இல்லை. பொதுக் குளங்கள், கிணறுகளில் நீர் எடுக்கவும் உரிமை இல்லை என மனுதர்மம் பெயரில் தீண்டாமை கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன.

சமத்துவ வாழ்க்கை: தமிழர்கள் சமத்துவ வாழ்வியல் முறையைக் கடைப்பிடித்தார்கள். வள்ளுவர் தனது குறளில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்று குறிப்பிடுகிறார். சங்க காலம் தொட்டு, ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டு வரை தமிழர்கள் சமத்துவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆண், பெண் சமத்துவம் தமிழர் வாழ்வில் மேலோங்கியிருந்தது. ஆனால், பிராமணர்கள் கடவுளின் பெயரால் மற்றவர்களை உயர்ந்தவர்கள் என்று சொல்வதுதான் இன்றைய பிரச்னைக்கு காரணமாக விளங்குகிறது.

'மனிதராகப் பிறந்த அனைவரும் சமமானவர்களே' என்ற அறிவியல் உண்மைக்கு மாறாக தம்மை உயர் சாதியினராகக் காட்டிக் கொள்ளக் குறிப்பிட்ட வகுப்பினர் இப்போதும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் அவர்கள் நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டம். அது பாதுகாப்பு வலியுறுத்தல் ஆர்ப்பாட்டம் அல்ல. தன் சமூக பெருமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு எதிரானது: மேலும், டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, 'திறமை அடிப்படையில் பிராமணர் அல்லாதவர் பதவிகளுக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர்' என்று பேசி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்தினர் என ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரையும் மிக மோசமானவர்களாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார். பிராமணர் சமூகம் உயர்வானது என நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் குற்றப்பரம்பரை என வர்ணம் அடித்திருக்கிறார்.

இதுமட்டும் அல்லாது, 'தெலுங்கர்கள் அந்தப்புரத்துச் சேவகர்கள்' எனச் சர்ச்சை கருத்தைச் சொல்லிவிட்டு, அப்படி சொல்லவில்லை என வியாக்கியானம் பேசுகிறார். சினிமாவில் மார்க்கெட் போன பிறகு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, ஊடக வெளிச்சம் தன் மீது விழ, அதன் மூலம் அரசியல் அங்கீகாரம் பெற, பிற சமுதாயத்து பெண்களையும், அதிகாரிகளையும் கேவலமாகச் சித்தரிப்பதை அனுமதிக்கவே முடியாது. இது இன்னொரு ஆரிய ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு. ஆகவே, ஆரியத்தை எப்போது தலைதூக்க விட மாட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "தமிழர்கள்-தெலுங்கர்கள் இடையே ஒற்றுமையை குலைக்கும் நடிகை கஸ்தூரி"-தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி பேட்டி

இதனிடையே, நடிகை கஸ்தூரி தனது 'X' தளத்தில் தெலுங்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் வந்துள்ளன. அவர்கள் என் தீர்மானத்தை மட்டும் கடினமாக்கினார்கள். இருப்பினும், இன்று எனது மிகவும் மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்கள் மீதும் நான் தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் தாக்கங்களை பொறுமையாக விளக்கினார்.

உண்மையான தேசியவாதி: நான் எப்போதுமே என் பாரத மாதாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி. நான் எப்போதும் சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். எனக்கு தெலுங்குடன் எப்போதும் சிறப்பான தொடர்பு உள்ளது என்பது அதிர்ஷ்டமாகும். நாயக்கர் மன்னர்கள், கட்டபொம்மு நாயக்கர், தியாகராஜ கிருதிகள் பாடி புகழ் பெற்ற நாட்களை ரசித்து வளர்ந்தவள் நான். தெலுங்கில் எனது திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் நல்ல குடும்பத்தை வழங்கியுள்ளார்கள்.

நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களின் சூழல்களை சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை மீண்டும் இப்போது வலியுறுத்துகிறேன். என்னுடைய தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது என்பது என்னுடைய நோக்கமாக இருந்தது இல்லை. கவனக்குறைவாக பேசிய வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன். அனைவரின் நலன் கருதி, நவம்வர் 3ஆம் தேதி அன்று நான் பேசிய உரையில் தெலுங்கு மக்களுக்கு எதிரான எனது அனைத்து பேச்சுக்களையும் திரும்பப் பெறுகிறேன்.

அந்த உரையில் நான் எழுப்பிய மிக முக்கியமான விஷயங்களில் இருந்து இந்த சர்ச்சை கவனத்தை திசை திருப்பியிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் தெலுங்கு சகோதரர்கள் தமிழ்நாட்டின் பிராமணர்களின் கண்ணியத்திற்கான போராட்டத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்" என்று தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.