ETV Bharat / state

தொண்டர்களை தரக்குறைவாக திட்டுவது திமுக கலாச்சாரம் - ராஜேந்திர பாலாஜி தாக்கு - dmk mp a.rasa

விருதுநகர் : ”தொண்டர்களை தரக்குறைவாக பொதுவெளியில் திட்டுவதுதான் திமுக கலாச்சாரமாக இருக்கிறது” என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

rajendra balaji
rajendra balaji
author img

By

Published : Sep 30, 2020, 5:59 PM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலைகள் அமைக்கும் திட்டத்திற்கான பூமி பூஜையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் ரயில்வே மேம்பாலத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல பணிகள் பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மக்கள் நலன் கருதி, அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் மக்களின் குடிநீர் பிரச்னை நிச்சயம் தீரும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தோண்டப்பட்ட சாலைகளை புதிதாக மாற்றியமைக்க தற்போது 24 கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்கியுள்ளன" என்றார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அப்போது, திமுக எம்பி ஆ.ராசா, திமுக தொண்டரை தரக்குறைவாக பொதுவெளியில் திட்டியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது திமுகவின் கலாச்சாரமாகவே தொடர்கிறது. 'ராசா வாழ்க' என்று கத்திய தொண்டரை தரக்குறைவாக வசைபாடிய ஆ.ராசாவின் மனநிலை நன்றாகப் புரிகிறது” என்றார்.

இதையும் படிங்க: வீடு புகுந்து மிரட்டி பணம், நகை பறிப்பு - கந்துவட்டி அட்ராசிட்டி: ஆட்சியரிடம் பெண் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.