விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் கரோனா தடுப்புக் கண்காணிப்புக் குழு அலுவலர் கருணாகரன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மக்களுக்குக் கிடைக்கும் உதவிகள், பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "விருதுநகரில் கரோனா வைரஸ் பாதிப்பால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் எட்டு பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் பொதுமக்கள் தனித்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள 121 தூய்மை பணியாளர்களுக்கான அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் கண்ணன் வழங்கினார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பெரியளவில் இல்லை எனவும்; இருப்பினும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் கண்ணன் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சொன்னது போலவே உதவிய மாவட்ட நிர்வாகம்’ - நன்றி நவிழும் பழங்குடியினர்!