ETV Bharat / state

தண்ணீர் பஞ்சம்; அருப்புக்கோட்டையில் பெண்கள் மறியல் - சாலை மறியல் போராட்டம்

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

virudhunagar woman protest for drinking water
author img

By

Published : Jun 17, 2019, 12:02 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர், வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டுவந்தது.

மழையின்மை, வறட்சி காரணமாக நகர் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக வீதி வீதியாக அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் 8, 11 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.

இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. தினமும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சொக்கலிங்கபுரம், திருச்சுழி சாலையில் நேற்று காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தண்ணீர் பஞ்சம்; சாலையில் குடங்களுடன் பெண்கள் மறியல்

தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த, பின்னரே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் திருச்சுழி சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:விருதுநகர்
16-06-19

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்Body:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யில் 8,11 வது வார்டுகளில் ஒருமாதமாக குடிநீர் வழங்காத அருப்புக்கோட்டை நகராட்சியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் சொக்கலிங்கபுரம் திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் மற்றும் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது கடந்த சில நாட்களாக வறட்சி காரணமாக நகர் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது மக்கள் குடங்களுடன் தண்ணீருக்காக வீதி வீதியாக அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ஆங்காங்கே குடிநீர் கேட்டு வீதிகளில் இறங்கி போராட்டமும் நடத்தும் நிலைக்கும் ஆளாகின்றனர். அந்த வகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் 8 மற்றும் 11 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர் இந்த பகுதிகளில் கடந்த ஒருமாதகாலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை கூறப்படுகிறது தினமும் குடிநீரை விலை குடுத்து வாங்கும் நிலையில் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என அந்த பகுதியை சார்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருச்சுழி சாலையில் சொக்கலிங்கபுரத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னரே மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர் போராட்டத்தால் திருச்சுழி சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.