ETV Bharat / state

10 ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி: உணவக உரிமையாளர் மீது வழக்குப் பதிவு! - பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி விளம்பரம்

விருதுநகர்: பத்து ரூபாய் நாணயத்திற்கு ஒரு பிரியாணி என அறிவித்து கரோனா காலத்தில் கூட்டத்தைக் கூட்டியதற்காக உணவக உரிமையாளர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

In Virudhunagar 10 rupees biryani shop closed and file case against shop owner

author img

By

Published : Oct 19, 2020, 8:55 AM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகம், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக நேற்று (அக். 18) ‘பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி’ என விளம்பரம் செய்திருந்தது.

விளம்பரத்தை பார்த்து முதல் ஆளாக பிரியாணி வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் கூட அணியாமல் பிரியாணி வாங்க கூடினர்.

பிரியாணி வாங்க ஒவ்வொருவரும் முட்டி மோதியதில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பிரியாணி கடையை இழுத்து மூடினர்.

மேலும் பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி என விளம்பரம் செய்து கரோனா காலத்தில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை கூட்டிய தனியார் உணவக உரிமையாளர் ஜாகிர்உசேன் மீது கரோனா நோய் பரப்புதல், தனிமனித இடைவெளியில்லாமல் கூட்டத்தைக் கூட்டுதல், கரோனா பரவல் தடை சட்டம் பிரிவு 188, 269,270 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க...'10 ரூபாய்க்கு பிரியாணி' என்ற விளம்பரத்தைப் பார்த்து ஆயிரக்கணக்கில் கூடிய பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.