நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மதுபான கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி பல இடங்களில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விருதுநகர் புல்லாக்கோட்டை சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அங்கு செயல்பட்டு வரும் பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட மேற்கு காவல் நிலைய காவல் துறையினர், மதுபான விற்பனையில் ஈடுபட்ட திருமலை, பிரபு ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் டாஸ்மாக் கடை அருகில் செயல்பட்டு வரும் பாரில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. பின்னர், அங்குகிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 565 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பார் உரிமையாளர் காமாட்சி என்பவர் கைது செய்யப்பட்டார்.