ETV Bharat / state

'கட்சிக்கொள்கையை அறிவித்தால் காப்பியடித்துவிடுவார்கள்' - கமல் ஹாசன் - kamal haasan

கட்சிக் கொள்கையை கூறினால் காப்பியடித்துவிடுவார்கள் என்பதால், தங்கள் கட்சிக் கொள்கையை கூறவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamal sivakasi speech
'கட்சிக்கொள்கையை அறிவித்தால் காப்பியடித்துவிடுவார்கள்'- கமல் ஹாசன்
author img

By

Published : Dec 15, 2020, 9:05 PM IST

விருதுநகர்: சிவகாசியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், உள்ளரங்க தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, கூவத்தூரில் ஆரமித்த கூத்து தற்போது தமிழ்நாடு முழுவதும் கூவம் ஆகிவிட்டது. நான் சிறுவயதில் இருந்தபோது கூவத்தை சுத்தம் செய்வேன் என கூறிய அரசியல்வாதிகள் யாரும் கூவத்தை சுத்தம் செய்யவில்லை. இவர்கள், எப்படி தமிழ்நாட்டை சுத்தம் செய்யவார்கள்.

எங்களுக்கு தன்மானம் உண்டு. என்றும் விட்டுக்கொடுக்கமாட்டோம். மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழ்நாடு தக்க பாடம் புகட்டும். எத்தனை தடைகள் வந்தாலும் மீறி செல்வோம். நாங்கள் பின்வாங்கமாட்டோம். எம்ஜிஆர் எங்கள் சொத்து, மக்கள் திலகம் என்பது திமுகவும் அதிமுகவும் கொடுத்ததில்லை; மக்கள் கொடுத்தது. லஞ்சம் வாங்காமல் ஆட்சியாளர்கள் செய்த ஒரே வேலை மக்கள் நீதி மய்யத்தை விளம்பரப்படுத்தியது.

'கட்சிக்கொள்கையை அறிவித்தால் காப்பியடித்துவிடுவார்கள்'- கமல் ஹாசன்

மக்கள் என்னை சினிமா காரனாக பார்க்கவில்லை. வெற்றி உனக்குத்தான் என தாய்மார்கள் தெரிவிக்கின்றனர். நமது கட்சிக்கொள்கையை அறிவித்தால், அதை காப்பியடித்துவிடுவார்கள் என்பதால் கட்சிக் கொள்கையை சொல்லாமல் உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: 'ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார்'- கமல் ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.