விருதுநகர்: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் தாக்கம் பரவத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கரோனாவைக் கட்டுப்படுத்த ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ஒமைக்ரானைக் கட்டுப்படுத்த உயர் அரசு அலுவலர்கள் ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்துப் பேருந்துகள், ஆட்டோக்களில் சுகாதாரத் துறையினர் முகக்கவசம் அணியாதோர் குறித்து ஆய்வுசெய்தனர்.
அப்போது பேருந்துகளில் முகக்கவசம் அணியாத பயணிகளை, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் என்பவர் சாலையின் நடுவே இறக்கிவிட்டார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Teacher suspended: மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கணினி ஆசிரியர் பணியிடை நீக்கம்