விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருபவர் ரம்யா(32). இவருக்கும் அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மருத்துவர் ரம்யா, செவிலியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இருவரையும் சாத்தூர் அரசு மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, இவர்கள் பணிபுரியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து, சுத்தப்படுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை நகராட்சி அலுவலர்கள் மூடி சீல் வைத்தனர். மேலும், அந்த மருத்துவமனையிலுள்ள மற்ற செவிலியர், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த கர்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.